'படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில்’.. 'மத்திய அமைச்சர் தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 27, 2020 11:47 AM

இந்தியாவில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் குறைந்து வருவதாக மத்திய குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

India\'s COVID 19 Situation Improving, Mortality Rate 3.1%

இந்தியாவில் புதிதாக 1,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 881 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்ச ஹர்ஷ்வர்தன் இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு  இறப்பு விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.1 சதவீதமாகவே உள்ளது என்றார் அவர்.

இதேபோல் குணமடைந்திருப்போரின் எண்ணிக்கையும் 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். இதுவரை 283 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும், கடந்த 7 நாட்களில் 64 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்னர், 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மாவட்டங்களில் நிலைமை சீராகி வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி அடைந்து வருவதாக தெரிவித்த ஹர்ஷ்வர்தன், எந்த நிலைமையையும் நம்மால் சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, மணிப்பூர், திரிபுரா, கோவா ஆகிய 3 மாநிலங்களில் 100 சதவீதம் ஆபத்தில்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.