'இவ்வளவு நாளா இது தெரியாமலேயே...' 'சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்...' நாமெல்லாம் 'பரம்பரையாக' பாதுகாக்கப்பட்டவர்கள்... 'விஞ்ஞானி கணிப்பு...'
முகப்பு > செய்திகள் > இந்தியாபல ஆண்டுகளாக நாம் உணவில் சேர்த்து வரும் ரசம், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![South Indians are hereditary protected ... scientist prediction South Indians are hereditary protected ... scientist prediction](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/south-indians-are-hereditary-protected-scientist-prediction.jpg)
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய (வி.சி.ஆர்.சி) மூத்த இந்திய துணை இயக்குநர் விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன், இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.
2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது, மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி, ஏப்ரல் 9, 2003 வரை, இந்தியாவில் சார்ஸ் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணவே மருந்து என சாப்பிடும் தென்னிந்தியர்களின், பிரதானமான உணவான ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரையீரலை பாதுகாக்கின்றன என்றும், இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)