‘புது மாதிரியாக பதவியேற்ற மோடி..!’ முதல்முறையாக மத்திய அமைச்சரானார் அமித் ஷா..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 30, 2019 10:05 PM

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுள்ளார் நரேந்திர மோடி.

indian history sees new process in Modis swearing-in ceremony

அமைச்சரவையில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் குறித்து நேற்று அமித் ஷா, மோடி இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிலிருந்தே மோடியின் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் அமைச்சர்கள் யார் யாரென கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. ஆனால் அதற்கு மோடி பதவியேற்கும் வரை பதில் கிடைக்கவே இல்லை.

நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் கலந்து கொண்ட பதவியேற்பு விழாவில் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். மோடி பதவியேற்கும் வரை அவரிடமிருந்தோ, பாரதிய ஜனதா கட்சி சார்பாகவோ அமைச்சர்கள் பட்டியல் அறிவிக்கப்படவே இல்லை. இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அமைச்சரவையில் இடம்பெறப்போகிறவர்கள் பற்றி அறிவிக்காமல் பிரதமர் பதவியேற்றது இதுவே முதல்முறையாகும்.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த விழாவில் தமிழகத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : #NARENDRAMODI #SWEARINGINCEREMONY