'நேருவை போலவே மோடியும்'...'பாஜக ஜெயிக்க' இதுதான் காரணம்...'ரஜினிகாந்த்'பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | May 28, 2019 02:02 PM
மோடி மக்களை ஈர்க்கும் தலைவராக இருப்பதால்,தேர்தல் முடிவுகள் மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவதாக,ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த ரஜினி,தேர்தல் முடிவுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது பேசிய அவர் ''நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மக்களை இழுக்கும் தலைவராக இருந்தனர்.ஆனால் ராஜீவ் காந்தியை காலம் பலி கொடுத்து விட்டது. அதற்கு பின்பு வாஜ்பாய் இருந்தார்.தற்போது அந்த வரிசையில்,மோடி மக்களை ஈர்க்கும் தலைவராக இருக்கிறார்.தமிழகத்திலும் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று மோடி இருக்கிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்தக வெற்றி என்பது,மோடி என்கிற தனி மனிதனிற்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை மோடிக்கு எதிராக வீசிய அலைக்கு காரணம் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் போன்றவைகள் தான்.அதனை எதிர் கட்சிகள் பிரச்சாரத்தில் நன்றாக பயன்படுத்தி கொண்டன.அதோடு ஆந்திரா, கேரளாவைவிலும் மோடிக்கு எதிராக வீசிய அலையே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது''.என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் ''தற்போதைய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.மேலும் கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் கமல் கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்'' என ரஜினி தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி நிச்சயம் விலக கூடாது.ஆளும் கட்சியை போன்று எதிர் கட்சியும் முக்கியம் என்பதால் ராகுல் நிச்சயம் தலைவர் பதவியில் தொடர வேண்டும்''.மேலும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி ''எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் கண்டிப்பாக கலந்துகொள்வேன்’’ என்றார்.