'மோடிக்கு கெடைச்ச வெற்றியா? அது ரஜினிக்கு! என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 28, 2019 06:07 PM

நடந்து முடிந்த 17வது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாள்ர்களை சந்தித்தார்.

\'its not BJP or modis victory, its a victory of EVM\' , ttv dhinakaran

அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், மோடியின் வெற்றிக்குக் காரணம், பாஜக என்கிற கட்சியை விட, மோடி என்கிற தனிமனித ஆளுமைதான் என்றும், மோடி மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியவர், ஆனால் தமிழகத்தில் பாஜக மீதான அதிருப்தி மனநிலைதான், இங்கு பாஜக தோல்வியைத் தழுவியதற்கான காரணமாகப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த, டி.டி.வி.தினரகன், விவேக், பெருமாள், கொடநாடு மேனேஜர் நடராஜன், உதவியாளர் கார்த்திக் ஆகியோர் கொண்ட  குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

அப்போது பேசிய டிடிவி தினகரன், தங்களுக்கு மக்கள் போட்ட வாக்குகள் எங்கே என்று தேடி வருவதாகவும், தவறு செய்தவர்கள் நிச்சயம் தடயத்தை விட்டுவிட்டு போயிருப்பார்கள் என்றும், அந்தத் தடயத்தைக் கண்டுபிடித்து வருகிறோம் என்றும், அதைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அப்போது மோடியின் வெற்றிக்குக் காரணம், பாஜக என்கிற கட்சியை விட, மோடி என்கிற தனிமனித ஆளுமைதான் என்று ரஜினி பேசியது பற்றி டிடிவி தினகரனிடம் கேட்டதற்கு, ‘அது அவரோட கருத்தாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை வாக்கு எந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம்’ என்று கூறி அதிர வைத்துள்ளார்.