'ரேடார் விஷயத்துல மோடி சொன்னதுல லாஜிக் இருக்கு', அதிரவைக்கும் விங் கமாண்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | May 28, 2019 11:44 AM
மேகங்கள் நம்மை ரேடாரின் பார்வையில் இருந்து மறைத்துக் காக்கும் என்று பிரதமர் மோடி கூறியதில் லாஜிக் உள்ளதாக விமானப்படை கமாண்டிங் அதிகாரி ஒருவர் தற்போது கூறியுள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரி தேசிய இன ஆக்கிரமிப்புக்கு எதிரான புல்வாமா தாக்குதல் இந்திய துணை நிலை ராணுவப்படை வீரர்கள் 44 பேர் மீது காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டதை அடுத்து, இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களாக ஜெய்ஷ்-இ-அகமது அமைப்பின் மீது இந்தியா பதில் தாக்குதல் நிகழ்த்தி அவர்களின் கூடாரத்தைத் தகர்த்ததாக கூறியிருந்தது.
அதன் பின்னர் இதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி, இந்தியா பதில் தாக்குதல் நிகழ்த்திய அன்றைய தினம், மோசமான வானிலை நிலவியதால், தாக்குதலை வேறொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்ததாகவும், ஆனால், மேகங்கள் நம்மை ரேடாரின் பார்வையில் இருந்து மறைத்து காப்பாற்றும் என்று தான்தான் ஐடியா கொடுத்ததாகவும் அதை ஏற்றுக்கொண்ட வல்லுநர்கள் தாக்குதல் நிகழ்த்தத் தயாரானதாகவும் கூறியிருந்தார்.
மோடியின் இந்த பதிலுக்கு பலரும் பல விதமான விவாதங்களை எழுப்பி, இதை சர்ச்சைக்குரிய கருத்தாக பிரகடனம் செய்தனர். ஆனால் அதன் பிறகு இ-மெயில் மற்றும் டிஜிட்டல் கேமராக்களை மோடி அட்வான்ஸாகவே பயன்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்ததை இன்னும் சர்ச்சைக்குள்ளாகியதால், மோடியின் இந்த பழைய சர்ச்சைக்கருத்தை பலரும் மறந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கூறியதில் பெருத்த லாஜிக் அடங்கியுள்ளதாகவும், ரேடார் விஷயத்தில் அவர் கூறியது உண்மைதான் எனவும், விமானப்படை கமாண்டிங் தலைமை அதிகாரி ரகுநாத் நம்பியார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார். அதன்படி,
மழை நாட்களில் அடர்த்தியான மேகங்கள் சூழ்ந்தால், அவற்றை ரேடாரால் அவ்வளவு துல்லியமாக ஊடுருவி கண்காணிக்க இயலாது என்றும், அதீத தொழில்நுட்பத் திறன் கொண்ட வெகு சில ரேடார்களைத் தவிர்த்து, பயன்பாட்டில் உள்ள பல்வேறு ரேடார்களால் அடர்த்தியான மேகங்களுக்குள் ஊடுருவும் திறன் முழுமையாக இருக்காது என்று கூறியுள்ளார்.