'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 23, 2019 02:45 PM

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நீங்கலாக, தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட இந்தியாவில் 542 தொகுதிகளிலும் 7 கட்டமாக நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக இந்தியா முழுவதும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

\'narendra modi ji, hearty congratulations ..You made it\',Rajini Tweets

முன்னதாக, மக்களவைத் தேர்தல் அல்ல; சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்று ரஜினி தெரிவித்ததும், அதன் பின்னர் இந்த மக்களவைத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என கேட்கப்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும் என்றும் அப்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்திருக்கும் பாஜகவின் வெற்றி ‘கிட்டத்தட்ட’ உறுதியாகிவிட்ட காரணத்தால், பிரதமர் மோடிக்கு நடிகரும், ரஜினி மக்கள் மன்றத் தலைவருமான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில்,  ‘டியர் நரேந்திர மோடி ஜி, இதயபூர்வமான வாழ்த்துக்கள் .. நீங்கள் நினைத்ததை சாத்திவிட்டீர்கள். கடவுள் ஆசீர்வதிப்பாராக’ என்று ரஜினிகாந்த் ட்வீட்டியுள்ளார். தனது அரசியல் பயணமும் ஆன்மீக வழியில்தான் இருக்கும் என்று ரஜினி முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.