“மேலும் 75 பேருக்கு கொரோனா!.. ஆக மொத்தம் 309.. 2வது இடத்தில் தமிழகம்" - சுகாதாரத்துறை செயலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 02, 2020 06:35 PM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

75 More Covid19 positive cases found, TN cases rise to 309

இந்நிலையில் இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனைகள் முடிந்ததாகவும் சிலருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்று கண்டறியப்பட்ட 75 பேரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.