“உயிருக்கு ஆபத்து இருக்கு!”.. கங்கணாவைத் தொடர்ந்து Y பிரிவு பாதுகாப்பு கோரிய பிரபல நடிகை!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகை பாயல் கோஷ் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து கோரியுள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது சில நாட்களுக்கு முன்பாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பாயல் கோஷ், நேற்று (செப்டம்பர் 29) மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்து பேசினார்.
இதுபற்றி கூறிய பாயலின் வழக்கறிஞர் நிதி சட்புதே, பாதுகாப்பு கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தனக்குக் கவலை தருவதாக அமைச்சர் ராம்தாஸ் கூறியதாகவும் தெரிவித்ததுடன், தனக்கும் பாயலுக்கும் Y பிரிவு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளதாகவும், பாயலின் உயிருக்கு சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதாகவும், தான் அவரைப் பாதுகாத்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநரின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களும், தகவலும் பகிரப்பட்டுள்ளன.
Had a great meeting with honorable @maha_governor Shri @BSKoshyari Sir 🙏🏼. He had supported me and we have to go all the way. The naysayers will be there but I will not stop, not stop and not stop. Bring it on!! pic.twitter.com/76OANU9x5Y
— Payal Ghosh (@iampayalghosh) September 29, 2020
அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்த பாயல் கோஷ், மகாராஷ்டிர ஆளுநருடனான சந்திப்பு நல்லபடியாய் இருந்ததாகவும், அவர் தன்னை ஆதரித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், “போக வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு. பேசுறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க. ஆனால் நான் நிறுத்த மாட்டேன், நிறுத்த மாட்டேன், நிறுத்த மாட்டேன். சவால்களை சந்திக்க தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.