WATCH: ‘மாஸ்க்-அ ஓபன் பண்ணுங்க’.. திறந்து பார்த்து ‘ஷாக்’ ஆன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமானப்பயணி ஒருவர் முகக்கவசத்துக்குள் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுப்பட்டிருந்துள்ளனர். அப்போது விமானப்பயணி ஒருவர் மீது சந்தேகம் எழவே, அவர் அணிந்திருந்த என்-95 முகக்கவசத்தை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். அதை சோதித்ததில் 40 கிராம் தங்கத்தை மறைத்து அவர் கடத்த முயன்றதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோழிக்கோடுக்கு பயணம் செய்தவர் என்பதும், கர்நாடகா மாநிலம் பட்கல் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Covid-19 innovations. Air Intelligence Unit , Calicut, has nabbed a passenger who had concealed 40 grams gold inside his N-95 face mask pic.twitter.com/9f2MKgIuMh
— bhavatosh singh (@bhavatoshsingh) September 29, 2020
இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த பயணி ஒருவர், பிரஷர் குக்கரில் 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததை விமான புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கத