'சிக்கியது சீனாவின் வண்டவாளம்...' 'ஆகஸ்ட்லயே' அங்க அல்லு 'விட்டுருச்சு...' 'இதுல...' "நாங்கள் உண்மையை மறைக்கவே இல்லைன்னு..." 'நாடகம் வேற...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jun 10, 2020 10:26 AM

சீனாவில் கொரோனா வைரஸ் 2019 ஆகஸ்டிலேயே பரவத்தொடங்கி விட்டது என்பதை, செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

In China Coronavirus virus began to spread in August 2019

கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன.

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. இதில் உண்மைத்தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து விட்டது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சீனா சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்கூட இதுபற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, வுகானில் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே, ஆகஸ்டு மாத தொடக்கத்திலேயே பரவத்தொடங்கி விட்டது என உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

இதனை நிரூபிக்க செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாகக் காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை. மேலும் இணையதள தேடல்களை அடிப்படையாகக்கொண்டும் தனது ஆய்வை நிரூபணம் சேர்க்கிறது ஹார்வர்டு மருத்துவ கல்லூரி.

செயற்கைகோள் படங்களின் அடிப்படையில் வுஹானில் உள்ள முக்கிய மருத்தவமனைகளில் கார்களின் இயக்கத்தை ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து இருக்கிறார்கள்.

வுகான் மருத்துவமனைகளில் செப்டம்பர் மத்தியில் தொடங்கி அக்டோபர் மத்தி வரையில், வியக்கத்தக்க அளவுக்கு கார்கள் அங்கு குவிந்திருந்ததை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜான் புரவுன்ஸ்டீன் இது பற்றி கூறுகையில், வுகானில் உள்ள 5 பெரிய மருத்துவமனைகளில் வந்த கார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து இருந்ததை நாங்கள் கண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஆஸ்பத்திரிகளில் கார்கள் குவிவது, ஒரு வித தொற்றுநோய் அதிகளவில் பரவுகிறபோதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்கிறார்கள்.

2019-ம் ஆண்டு கோடை காலத்தின் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வுகானில் உள்ள 5 பெரிய மருத்துவமனைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்துள்ளளனர். அப்போது எல்லா மருத்துவமனைகளிலுமே ஆகஸ்ட்டு மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் கார்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளன.

ஏறக்குறைய 350 செயற்கை கோள் படங்களில், சுமார் 108 படங்களை ஆராய்ச்சியாளர்கள் வுகான் மருத்துவமனைகளையும், அதன் சுற்றுப்புற சாலைகளையும் ஆராய பயன்படுத்தி உள்ளனர்.  வுகானில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் கார்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு அதிகமாக இருந்து உள்ளது.

மற்றொரு முக்கிய ஆதாரமாக, 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இடையே வுகான் மருத்துவமனைகளில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்த அதே சமயத்தில், சீனாவின் தேடல் இணையதளமான ‘பைடு’ இணைய தளத்தில் அதிகமாக இருமல், வயிற்றுப்போக்கு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தேடி உள்ளனர். இதெல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

எனவே கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது கடந்த டிசம்பரில் அல்ல, அதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதுதான் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. In China Coronavirus virus began to spread in August 2019 | World News.