அமெரிக்காவில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் தனது காலை கொண்டு அவரது கழுத்தை இறுக்கி கொன்ற வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த கொடுமையான மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டக்களமாக மாறியது. பல இடங்களில் வன்முறையும் வெடித்தன. இரும்புக்கரம் கொண்டு போராட்டம் ஒடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதே வேளையில் ஹாங்காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு, சீனாவுக்கு எதிராக போராடும் ஹாங்காங் மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே இனவாத, இனவெறி பிரச்சனைகளை வைத்துக் கொண்டு சீனாவை அமெரிக்கா குற்றம் கூறுகிறது என சீனா பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், ஹாங்காங் விவகாரம், மனித உரிமை விவகாரம் ஆகியவற்றில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு எந்த தகுதியுமில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்க அரசு செயலாளர், சீனா அரசின் போக்கின் மூலம் அமெரிக்காவுக்கு ஆபத்துளளது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வடகொரிய அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில், ஆளும் கட்சி வெளியுறவுத் துறை பிரதிநிதி, 'சீனா மீது அவதூறு பரப்பும் வகையில் ஹாங்காங், தைவான், மனித உரிமைகள், வர்த்தக விவகாரங்கள் குறித்து அமெரிக்க செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை. உளவு பார்ப்பது, மற்ற நாடுகளுக்கு எதிராக திட்டம் போடுவது என அவரும் அறியாமையில் சிக்கியுள்ளார். அமெரிக்க தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது அமெரிக்காவின் வீழ்ச்சியை தான் குறிக்கின்றது' என விமர்சித்துள்ளார்.

மற்ற செய்திகள்
