7 ரன்களில் ‘எல்லோரும் டக் அவுட்’.. ‘754 ரன்கள்’ வித்தியாசத்தில் வெற்றி.. ‘இப்படியும் ஒரு மேட்சா!’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Nov 21, 2019 07:39 PM

ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர்கள் அனைவரும் டக் அவுட் ஆக,  எதிரணியினர் 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

Cricket Bizarre All Out For 7 Rivals Win By 754 In Harris Shield

மும்பையில் நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் சில்ட்ரன் வெல்ஃபேர் பள்ளி அணியும், சுவாமி விவேகானந்தர் பன்னாட்டுப் பள்ளி அணியும் மோதியுள்ளன. ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விவேகானந்தா பள்ளி அணி 39 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 761 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து விளையாடிய சில்ரன் வெல்ஃபேர் பள்ளி அணி மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் 6 ஓவர்களில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகியுள்ளனர். அந்த அணி மொத்தமாகப் பெற்ற 7 ரன்களுமே 6 வைடுகள் மற்றும் ஒரு பைய் ஆகியவற்றால் கிடைத்தாகும். இதன்மூலம் விவேகானந்தா பள்ளி அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Tags : #CRICKET #MUMBAI #BIZARRE #HARRISSHIELD #MATCH