'துணை முதல்வர் ஓ.பி.எஸ்' மருத்துவமனையில் 'அனுமதி'... 'தெலங்கானா கவர்னர்' உடல் நலம் 'விசாரிப்பு...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. துணை முதல் அமைச்சர் இன்று மாலை பரிசோதனைகளை முடித்து விட்டு வீடு திரும்பி விடுவார் என கூறப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 24ம்தேதி மாலை, முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று ( மே 25) காலை மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தொலைபேசி மூலம் ஓ.பி.எஸ்., ஐ தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார்.

மற்ற செய்திகள்
