'ஆசனவாய் வழியாக சரக்கு பாட்டிலை நுழைத்த மதுப்பிரியர்...' வயிறை ஸ்கேன் பண்ணி பார்த்தப்போ டாக்டர்ஸ் மிரண்டுட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மது போதையில் தான் குடித்த குவார்ட்டர் பாட்டிலையே தன் பின் பக்கவழியாக வயிற்றுக்குள் செலுத்தியுள்ளார் நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்.

29 வயதான பக்கிரிசாமி என்னும் இளைஞர் நாகை அடுத்த நாகூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. மது கிடைக்காத வருத்தத்தால் மன உளைச்சலில் இருந்த பக்கிரிசாமி, கடந்த சில நாட்களுக்கு முன் மதுபான கடைகள் திறந்தது முதல் எக்கச்சக்க மது பாட்டிலை வாங்கி கண்முன் தெரியாமல் குடித்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதியும் அதிக அளவில் சரக்கு பாட்டில்களை வாங்கி குடித்துள்ளார். மது போதை தலைக்கேறிய பக்கிரிசாமி தான் குடித்து வைத்த குவார்ட்டர் மது பாட்டிலை தனது ஆசன வாய்க்குள் சொருகியுள்ளார்.
பாட்டில் முழுவதும் வயிற்று பகுதிக்கு சென்றுள்ளது. விடிந்ததும் போதை தெளிந்த பக்கிரிசாமிக்கு என்ன நடந்தது தெரியாமல் இருந்துள்ளார். ஆனால் அவரின் வயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்துள்ளார்.
பக்கிரிசாமியின் குடும்பத்தார் நேற்று 28-ம்தேதி நாகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பக்கிரிசாமி உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் முழுபாட்டிலும் வயிற்றுப்பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதையடுத்து நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சத்தீஸ்வரன், பக்கிரிசாமிக்கு ஆசனவாய் வழியாக இனிமா கொடுத்து 2 மணி நேரம் போரட்டத்திற்கு பின், முழு பாட்டிலையும் காயமின்றி வெளியில் எடுத்து பக்கிரிசாமியை காப்பாற்றியுள்ளார்.
மதுபோதையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு பக்கிரிசாமியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என சமூகவலைத்தளங்களில் பலர் புலம்பி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
