சென்னையில் 'கொரோனாவுக்கு' பலியான தலைமை 'செவிலியர்'!.. பணி 'நீட்டிக்கப்பட்ட' 2 மாதத்தில் நடந்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்த தலைமை பெண் செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். 133 பேர் பலியாகியுமுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 95 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில், 8 ஆயிரத்து 500 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 771 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 9 ஆயிரத்து 909 பேர் மருத்துவமனைகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த தலைமை பெண் செவிலியர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, கடந்த 2 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மற்ற செய்திகள்
