30 வருசமா தேடப்பட்டு வந்த குற்றவாளி.. பிளான் பண்ணி தூக்கிய போலீஸ்.. "இவ்ளோ நாள் சினிமா'ல வேற நடிச்சிட்டு இருந்தாரா??"..
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 30 வருடமாக, தேடப்பட்டு குற்றவாளி ஒருவரை தற்போது போலீசார் பிடித்துள்ள நிலையில், அவர் இத்தனை ஆண்டுகள் செய்து வந்த காரியம், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியை எடுத்த நரைனா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். தற்போது 65 வயதாகும் இவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தும் வந்துள்ளார். ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பணிக்கு செல்லாததால், அவரை ராணுவத்தில் இருந்து நீக்கவும் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 80களில், கார் மற்றும் பைக் திருட்டு தொடர்பாக, ஓம் பிரகாஷ் மீது புகார் எழவே, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிவானா என்னும் பகுதியில், கொள்ளையடிக்கும் முயற்சியின் போது, ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்ட சமயத்தில், ஒருவரை கொலை செய்த வழக்கில் போலீசார் ஓம் பிரகாஷை தேடியும் வந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது சிக்கியுள்ள ஓம் பிரகாஷ், இத்தனை ஆண்டுகளில் என்ன செய்து வந்தார் என்பது தான் பலரையும் மிரண்டு போக செய்துள்ளது.
1992 ஆம் ஆண்டு கொலை செய்த பின்னர், ஓம் பிரகாஷ் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள கோவில்களில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதிக்கு சென்ற ஓம் பிரகாஷ், தனது பெயரை பாஷா என மாற்றி, அங்கே லாரி ஓட்டி வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், 1997 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ஓம் பிரகாஷ் காசியாபாத் பகுதியில் வீடு ஒன்றை வைத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பானிபட் பகுதியில் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் இருந்த உறவை துண்டித்த ஓம் பிரகாஷ், அங்கே சென்றால் சிக்கி விடுவோம் என தனது மனைவி மற்றும் மகளை கூட காண செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. லாரி ஓட்டி வந்த ஓம் பிரகாஷ், நிகழ்ச்சிகளில் பஜனை பாடியும், சுமார் 15 ஆண்டுகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு திரைப்படத்தில் கான்ஸ்டபிள் ஆகவே அவர் வருவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஓம் பிரகாஷ் குறித்து பின்புலம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஹரியானா போலீசார் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட பல கிரிமினல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக காசியாபாத் பகுதியில், ஓம் பிரகாஷ் வாழ்ந்து வரும் ரகசிய தகவல் போலீசருக்கு கிடைத்துள்ளது. அதன் பின்னர், அவரது நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கி இறுதியாக தற்போது ஓம் பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தலைமறைவாக இருந்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
