துப்பாக்கியோட.. சூப்பர் மார்க்கெட்குள்ள நுழைஞ்ச கும்பல்.. உள்ள இருந்த 80 வயசு OWNER.. திருடிட்டு ஓடிடுவாங்கன்னு பாத்தா அங்க தான் ஒரு 'ட்விஸ்ட்'
முகப்பு > செய்திகள் > உலகம்கலிபோர்னியா பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில், திடீரென நான்கு திருடர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தது தொடர்பான சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Craig Cope என்ற 80 வயது முதியவர், கலிஃபோர்னியா பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர் கடைக்குள் இருந்த சமயத்தில், திடீரென ஒரு கார் அங்கே வந்து நிற்பதையும் அவர் கவனித்துள்ளார்.
கவுண்டருக்கு பின்னால் Cope இருந்த போது, கையில் துப்பாக்கியுடன் வந்த திருடர்கள், கடைக்குள் நுழைந்து திருட முயற்சி மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, சூப்பர் மார்க்கெட் கார் பார்க்கிங்கில் அந்த கார் நிற்காமல், கடையில் ஓரமாக நிற்பதை பார்த்ததுமே ஏதோ ஒன்று அசம்பாவிதமாக நிகழப் போவதாகவும் Cope உணர்ந்துள்ளார்.
அங்கிருந்த பொருட்களுக்குப் பின்னர், கோப் மறைந்து நிற்கவே உள்ளே நுழைந்த திருடன் ஒருவன், நேரடியாக கோப்பை பார்த்து துப்பாக்கியை நீட்டி உள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், தன்னிடம் வைத்திருந்த ஷார்ட் கன்னைக் கொண்டு, திருடனை நோக்கி Cope சுட, அது அவன் கையில் தாக்கியதாக தெரிகிறது. இதனால், கத்திய படியே அங்கிருந்து ஓட்டம் பிடித்த திருடனைக் கண்டு, மற்ற திருடர்களும் காருக்குள் ஏறி வந்த வேகத்திலேயே தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், Cope-ற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றி 80 வயதான Cope தெரிவிக்கையில், "காரில் இருந்து சில மர்ம நபர்கள், மாஸ்க் அணிந்த படி, துப்பாக்கியுடன் இறங்கியதை நான் கவனித்தேன். இதனால், அவர்களை எதிர்கொள்ளவும் நான் முன்பாகவே தயாராகினேன். திருடர்கள் உள்ளே நுழைந்ததுமே எனக்கு அவர்களை தாக்கவும் வசதியாக இருந்தது. ஒன்று நான் இருப்பேன். அல்லது அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நிலையில், அதில் ஒருவனை நான் சுட்டதும் அது அவன் கையில் பட்டது. நான் அவன் கையில் சுட்டு விட்டேன் என வேதனையில் கத்தியபடி அங்கிருந்து அவன் ஓடினான்" என Cope தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கி குண்டடிபட்ட காயத்துடன் மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சூப்பர் மார்க்கெட்டில் திருட முயன்ற நான்கு பேரை போலீசார் அடையாளம் கண்டு, தற்போது விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், பயங்கர ஆயுதங்களுடன் சூப்பர் மார்க்கெட்டில் நுழைவதை முன்னரே சுதாரித்துக் கொண்ட அதன் உரிமையாளரான 80 வயது முதியவர், அதற்கு ஏற்ப தயாராகி திருடர்களை ஓட வைத்த சம்பவம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.