195 வாலிபர்களை இரையாக்கிய 'அசுரன்'... உலகின் மோசமான 'மான்ஸ்டர்'... 'மிரண்டு' போன நீதிபதி...
முகப்பு > செய்திகள் > உலகம்By Suriyaraj | Jan 07, 2020 05:33 PM
இந்தோனேசியாவை சேர்ந்த ரெய்ன்ஹார்ட் சினாகா என்ற பிஎச்டி படித்த நபர் உலகின் மிக மோசமான சீரியல் பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்தோனேசியாவில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ல் 24 வயதாக இருந்தபோது மாணவராக இங்கிலாந்துக்கு வந்தார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் திட்டமிடலில் முதுகலைப் படிப்பை முடித்து உள்ளார்.
இதன் பின்னர் அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் புவியியலில் பிஎச்டி படிப்புக்கு சேர்ந்தார். 'பாலியல் மற்றும் அன்றாட நாடு கடந்த விதம்' என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையை தயார் செய்வதற்காக அவர் மான்செஸ்டரில் உள்ள தெற்காசிய ஓரின சேர்க்கையாளர்கள் கிராமத்திற்கு சென்று வந்தார்.
அதன் பின்னர் ரே ஓரினச் சேர்க்கையாளராக மாறியதாகக் கூறப்படுகிறது. அதோடு பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா குறைந்தது 195 வாலிபர்களை தனது இரையாக்கி உள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர். உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பெரும்பாலும் ஒரு பாலின மாணவர்களை குறிவைத்துள்ளார் சினாகா. 136 பாலியல் வன்கொடுமைகள், எட்டு பாலியல் தாக்குதல் முயற்சிகள் மற்றும் 15 அநாகரீகமான தாக்குதல்கள் உட்பட 159 வழக்குகளில் சினாகா தண்டனை பெற்று உள்ளார். 195 வெவ்வேறு ஆண்களைத் தாக்கியதாக வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் உள்ளவர்களில் 70 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
2017-ல் சினாக கைது செய்யப்பட்டார். லீட்ஸ் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்தது. 2018-ம் ஆண்டில் அவரது, முதல் வழக்கு விசாரணைக்கு பின்னர் அவரை வெளியேற்றியது. விசாரணை முடிவில அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை விதித்த நீதிபதி இப்படி ஒரு மான்ஸ்டரை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். பிஹெச்டி படிப்புக்காக ஆராய்ச்சிக் கட்டுரை தயார் செய்ய சென்ற சினாக தற்போது ஒரு முழுமையான குற்றவாளியாக மாறியிருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.