"மொத்தமா 500 சவரன்.." வீட்டில் இருந்து மாயமான நகைகள்.. "சொந்த வீட்டுலயே இப்டி ஒரு வேல பாத்துருக்காரே.." பரபர பின்னணி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் இருந்த சுமார் 500 பவுன் நகை காணாமல் போன நிலையில், இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
![Chennai man takes 500 sovereign gold from his own house Chennai man takes 500 sovereign gold from his own house](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-man-takes-500-sovereign-gold-from-his-own-house.jpg)
சென்னை பூந்தமல்லி முத்து நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது தம்பி பெயர் ராஜேஷ். இவர்கள் இருவரும், தங்களின் தாயாருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
சேகருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவரது மனைவி பிரிந்து சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ராஜேஷூக்கும் திருமணமான நிலையில், தனது மனைவியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
சகோதரர்களான சேகர் மற்றும் ராஜேஷ் ஆகியோர், ஸ்வீட் கடை நடத்தியும், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சேகரின் மனைவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், கணவர் வீட்டில் இருந்த தனது 300 பவுன் நகையை பீரோவில் பார்த்த போது, அவை மாயமானது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார் சேகரின் மனைவி.
இதன் பின்னர், ராஜேஷின் மனைவி மற்றும் அவரது தாயாரின் சுமார் 200 சவரனுக்கு அதிகமான நகையையும் வீட்டில் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ந்து போகவே, அவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
முதற்கட்டமாக, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சேகர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுக்க, அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, வீட்டில் இருந்த சுமார் 500 சவரன் நகையை, சேகர் எடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வேளச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சேகருடன் பழக்கம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும், போரூர் பகுதியில் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் இருந்த 500 சவரன் நகையையும் அந்த இளம்பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்துள்ளார் சேகர். அதே போல, கார் ஒன்றையும் இளம்பெண்ணுக்கு சேகர் வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்த நகையை திருடி, நெருங்கிய தோழிக்கு சேகர் அளித்து வந்த சம்பவம், குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருந்தது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)