“என் அம்மா ஈழத் தமிழர்தான்.. இளவயது முத்தையாவாக நடிக்க மறுத்தேன்.. காரணம் இதுதான்!” - ‘அசுரன்’ பட ‘இளம்’ நடிகர் ‘பரபரப்பு’ தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் ‘800’ எனும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிரான கருத்துக்கள் தமிழ் சூழலில் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இளவயது முரளிதரனாக நடிக்க, தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் படத்தின் அரசியல் காரணமாக, தான் அந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் அசுரன் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் டீஜே அருணாசலம் தெரிவித்துள்ளார். அதற்கு முக்கியக் காரணம், தனது தாயாரும் ஈழ தமிழர் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 800 திரைப்படம் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்று பின்னணியை சித்தரிப்பதால், இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்ததாகவும், அசுரனில் நடித்ததற்காக தன்னை பாராட்டிய விஜய் சேதுபதி மீது தனக்கு மிகுந்த மரியாதையும் புகழும் இருப்பதால் 800-ஐ விஜய் சேதுபதி தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்றும் டீஜே கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரபலங்கள், திரைக்கலைஞர்கள், பலரும் இந்த படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், விவேக், கவிஞர் தாமரை, உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி கருத்துக்களை வெளியிட்டனர். அத்துடன் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேகை பலரும் பயன்படுத்தி 800 திரைப்படத்திற்கு எதிராக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
