“அப்போ.. புரிதல் இல்லை.. இயக்குநர் வற்புறுத்தினாரு”.. இணையத்தில் பரவும் தனது ஆபாச காட்சி.. இப்போது சட்டக் கல்லூரி மாணவியாக இருக்கும் நடிகை பரபரப்பு புகார்!
முகப்பு > செய்திகள் > இந்தியா“ஃபார் சேல்” என்கிற மலையாளப் படத்தின் படுக்கை அறை காட்சியில், கடந்த 2013-ஆம் ஆண்டு வாக்கில், அதாவது தனது 14 வயதில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா ஆபிரகாம்.

முன்னதாக சோனா ஆபிரகாம், தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய வீடியோ வெளியான பின்னணி குறித்தும் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஃபார் சேல் என்கிற மலையாள படத்தில் என் 14 வயதில், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, நடித்தேன். அப்படத்தில் நான் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போல, படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி காட்சிப்படுத்தியிருந்தார்.
150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியை படமாக்க திட்டமிட்ட இயக்குனர் சதீஷ் அனந்தபுரியிடம் நான் நடிக்க மறுப்பதாக கூறியதால், என்னை வற்புறுத்திய அந்த இயக்குனர் தன் அலுவலகத்திற்குள் வைத்து அந்த காட்சியை படமாக்கினார். அப்போது அந்த காட்சி குறித்த புரிதல்கள் எனக்கு இல்லை. 10-ம் வகுப்பு படித்து வந்த நான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றேன். ஆனால் படம் வெளியான போது, அந்த காட்சிகள் முறையாக எடிட் செய்யப்பட்டு வெளியாகின. ஆனால் எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகள், படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து சமூக வலைதளங்களில் வெளியாகின. அண்மையில் எனது கவனத்துக்கு தெரியவந்ததை அடுத்து அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் காவல்துறையினர் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்தேன்.” என்று கூறினார்.
தற்போது சட்டம் படித்து வரும், 21 வயதான சோனா அண்மையில் சமூக வலைதளங்களில், தான் அப்போது நடித்த அந்த படக் காட்சிகள் வலம் வருவதாகவும், அவற்றை நீக்க கோரியும் போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்ட அவரை அவரது பெற்றோர் காப்பாற்றியும் உள்ளனர். இந்நிலையில் பார் சேல் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராக பலத்த கண்டன குரல் எழுந்து வருகின்றது.
இதனிடையே பெற்றோரின் பணத்தாசையால் அந்த மாதிரி காட்சியில் ஒப்புக்கொண்டு, தான் நடிக்க வைக்கப்பட்டதை வசதியாக, நடிகை சோனா ஆபிரகாம் மறைத்து புகார் அளித்துள்ளதாகவும், பல ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை இப்போது பரப்பிவிடுவது யார் ? என்று புகாரில் அவர் குறிப்பிடவில்லை என்றும் போலீஸார் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
