‘தனக்கு தானே தாலி கட்டி கல்யாணம்’.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய இளம்பெண்.. வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னை தானே திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | வைரலாகும் ஆஷிஷ் நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் page… அப்படி அதுல என்ன இருக்கு?
குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. சமூகவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆண்-பெண் என்ற திருமண பந்தத்தில் விருப்பமில்லாத ஷாமா பிந்து, தன்னை தானே திருமணம் செய்து வாழப் போவதாக அறிவித்தார். இதை ‘சோலோகமி’ என குறிப்பிடுகின்றனர். இந்த திருமணத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜூன் 11-ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்த ஷாமா பிந்து, 3 நாட்கள் முன்னதாக, நேற்றே தனக்கு தானே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். முன்னதாக மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உள்ளிட்ட பாரம்பரிய குஜராத் வழக்கபடி சடங்குகள் நடத்தி, தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்துக் கொண்டார்.
இந்த திருமண விழாவில் நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதன் மூலம், பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ஷாமா பிந்து, ‘சோலோகமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமணத்துக்கு பிறகு கோவாவுக்கு தேனிலவு செல்ல இருப்பதாக ஷாமா பிந்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
