கல்யாணம் முடிஞ்சதும் ஆசையாய் கிஃப்ட் பாக்ஸை திறந்து பார்த்த மாப்பிள்ளை.. உள்ளே இருந்த பொம்மை.. அதுக்கப்புறம் நடந்த விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | மனைவிக்கு பிரசவம்.. உடனே நாடு திரும்பும் கேன் வில்லியம்சன்.. அப்போ SRH அணிக்கு அடுத்த கேப்டன் இவர் தானா..?
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் லதேஷ் காவித் என்பவர், கங்காபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை, லதேஷ் காவித் மற்றும் மணமகளின் உறவினர் ஜியான் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் பரிசுப் பொருட்களைப் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது கிஃப்ட் பார்சல் ஒன்றில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பொம்மை இருந்துள்ளது. உடனே மணமகன் லதேஷ் காவித் மற்றும் ஜியான் அந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றனர். அப்போது திடீரென அந்த பொம்மை வெடித்து சிதறியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனை அடுத்து இருவரையும் மீட்ட உறவினர்கள் நவ்சாரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் வன்ஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வெடித்து சிதறிய பரிசு பொருள் மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னாள் காதலன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் பெயர் ராஜு படேல் என்றும், மணமகளின் மூத்த சகோதரியை அவரை காதலித்ததாகவும், இருவரும் சில நாட்களுக்கு முன்பு பிரிந்து விட்டதாகவும், மணப்பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
