“என்னோட ஆசை இதுதான்”.. மலை மீது வருங்கால கணவரை கொல்ல முயன்ற ‘இளம்பெண்’ சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிச்சயிக்கப்பட்ட பையனின் கழுத்தை அறுத்தது குறித்து இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Also Read | “எனக்கு முன்னாடியே பொல்லார்டு ஓய்வு பெறுவார்னு நெனக்கவே இல்ல”.. கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் உருக்கம்..!
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த இளம்பெண் புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, ராமகிருஷ்ணாவை மலை ஒன்றுக்கு புஷ்பா அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சில மணிநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ‘உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க போகிறேன். கண்ணை மூடு’ என்று கூறி ராமகிருஷ்ணன் கண்ணை தன்னுடைய துப்பட்டாவால் புஷ்பா கட்டினார். இதனை அடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் வலியில் அலறித் துடித்துள்ளார். இதைப் பார்த்து சற்று மனம் மாறிய புஷ்பா அவரை தன்னுடைய ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்களிடம், மலை மீதுள்ள பாபா கோவிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது கால் தவறி ராமகிருஷ்ணா கீழே விழுந்துவிட்டார். அதில் காயம் ஏற்பட்டுவிட்டதாக புஷ்பா கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் புஷ்பாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராமகிருஷ்ணாவை கழுத்தை அறுத்ததை அவர் புஷ்பா ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ‘நான் துறவியாக வாழ நான் திட்டமிட்டிருந்தேன். அதனால் எனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. ஆனால் இதை என் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தை சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். அதனால் வருங்கால கணவரை கொன்று விட்டால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என இப்படி செய்துவிட்டேன்’ என புஷ்பா வாக்குமூலம் கொடுத்ததாக டிஎஸ்பி சுனில் குமார் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8