மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 02, 2022 03:03 PM

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் வியப்படைய  செய்திருக்கிறது.

Indian woman set to marry herself in Vadodara

Also Read திருமணத்தை மீறிய உறவு.. தலைமறைவான ஜோடி லெட்டர் எழுதி வச்சுட்டு எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் தூத்துக்குடி..!

உலகம் முழுவதும் திருமண சடங்குகள் குறித்த பார்வை மாறியிருக்கிறது. அன்பை அளிக்கவும் பெறவும் பாலினம் தேவையில்லை எனக் கருதுபவர்கள் தங்களது விருப்பப்படி வாழ, உலகின் பல்வேறு நாடுகள் அனுமதியளித்து வருகின்றன. இந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது அந்த வட்டாரம் முழுமையும் பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது.

Indian woman set to marry herself in Vadodara

வினோத திருமணம்

குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய 24 வயதான பிந்து,"நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஒரு வேளை நம் நாட்டில் சுய-அன்புக்கு நானே உதாரணமாக இருப்பேன் எனத் தோன்றுகிறது. சுய திருமணம் என்பது உங்களுக்காக நீங்களே இருப்பதற்கான உறுதிப்பாடு. இது சுயமாக தம்மைத் தாமே ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன்" என்றார்

Indian woman set to marry herself in Vadodara

மரபுப்படி

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் பிந்து, தன்னுடைய திருமணம் இந்து மத மரபுகளின்படி நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். சிலர் சுய திருமணங்களை பொருத்தமற்றதாகக் கருதுவதாக கூறும் பிந்து,"உண்மையில் இதன்மூலம் பெண்களின் தனிப்பட்ட முடிவுகள் முக்கியம் என்பதை உணர்த்த முயல்கிறேன்" என்றார்.

தனது பெற்றோர் குறித்து பேசிய பிந்து," எனது தாய் மற்றும் தந்தை திறந்த மனமுடையவர்கள். ஆகவே என்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது பரிபூரண சம்மதத்துடனே எனது திருமணம் நடைபெற இருக்கிறது" என்றார்.

Indian woman set to marry herself in Vadodara

தேன்நிலவு

வதோதராவில் உள்ள கோத்ரி கோவிலில் வழக்கமான திருமணம் போலவே தனது திருமணமும் நடைபெற இருப்பதாக கூறும் பிந்து திருமணம் முடிந்தவுடன் கோவாவிற்கு ஒருவார காலம் ஹனிமூன் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது திருமணம் குறித்து பேசிய பிந்து," இந்தியாவில் இதற்கு முன்னர் யாராவது இதுபோல சுய திருமணம் செய்துகொண்டார்களா? என இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. ஆகவே இந்தியாவில் முதல் சுய திருமணம் என்னுடையதாகத்தான் இருக்கும்" என்றார் மகிழ்ச்சியாக.

Indian woman set to marry herself in Vadodara

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருப்பது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டுவருகிறது.

Also Read | சைலண்டா நடந்து முடிஞ்ச பிரபல CSK வீரரின் திருமணம்.. வரவேற்பில் பங்கேற்கும் தோனி மற்றும் கோலி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Tags : #INDIAN WOMAN #MARRY #VADODARA #இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian woman set to marry herself in Vadodara | India News.