"இத எப்படி பண்ணீங்கன்னு ஒரு வீடியோ போடுங்க".. வியந்துபோய் ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச புகைப்படம்.. இது நல்லாருக்கே.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடுகளில் பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்கவே பலராலும் முடிவதில்லை. திட்டமிட்டதுபோல, வீட்டை மாற்றுவது என்பது கடுமையான உழைப்பை கோரும் செயல். ஆனால், சில இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் போது நாம் நிச்சயமாக வியந்துபோய்விடுவோம். அப்படி, கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் ஒரேமாதிரியாக தட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் ட்வீட்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரி கோவிலில் தான் இப்படி தட்டுகள் கண்ணை கவரும் வகையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் ஆஷா கர்கா என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில்," நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் சமநிலையை அடைவதே வாழ்வின் மிகப்பெரும் ரகசியமாகும். கர்நாடக மாநிலம் சிருங்கேரி கோவிலில் தட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை பார்க்கவே அருமையாக இருக்கிறது. இந்த எளிமையான கோவிலில் நவீன சாதனம் போல இது அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ வேண்டும்
இந்நிலையில், ஆஷா என்பவரின் இந்த பதிவை ஷேர் செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா,"இது அருமையாக இருக்கிறது. ஒரு சிற்பம் போல... கலை, துல்லியம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கலவை. இதை அடுக்கி வைக்கும் வீடியோ பகிரப்பட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
