"இதை மட்டும் செய்யுங்க.. அடுத்து கல்யாணம் தான்".. 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி.. மேட்ரிமோனியில் நடந்த விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் செய்துகொள்வதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Also Read | "ட்விட்டரை இப்போதைக்கு வாங்கல".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் ட்வீட்.. காரணம் இதுதானா?
மேட்ரிமோனி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபர்ஹான் கான். 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் இவர், போலியான தகவல்களின் அடிப்படையில் மேட்ரிமோனி ஒன்றில் தனது புரொஃபைலை பதிவிட்டிருக்கிறார். அதில், தான் பொறியியல் பட்டம் பெற்றபிறகு, மேலாண்மை கல்வி பயின்றதாகவும் தற்போது சொந்தமாக தொழில் செய்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஃபர்ஹான். தனது தாய் மற்றும் தந்தையர் இறந்துவிட்டதாகவும் தனக்கு அன்பான ஒருவர் வாழ்க்கை துணைவியாக வர விரும்புவதாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் இவர்.
மோசடி
ஃபர்ஹானின் புரொஃபைலை பார்த்துவிட்டு, அவரை தொடர்புகொள்ளும் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தினைப் பெற்றுவிட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து விலகிவிடுவதையே ஃபர்ஹான் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறுகின்றனர் காவல்துறையினர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் மருத்துவர் ஃபர்ஹானின் புரொஃபைலை பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
அவரிடம், தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் 15 லட்ச ரூபாய் கொடுத்தால், அதனை சரி செய்துவிடுவேன் என்றும் அதன்பிறகு உடனடியாக நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் ஃபர்ஹான் தெரிவித்திருக்கிறார். இதனை நம்பிய அந்த மருத்துவரும் பணத்தை கொடுக்க, அடுத்த சில நாட்களில் ஃபர்ஹான் தலைமறைவாகிவிட்டார்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவர், டெல்லி சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து மார்ச் 26 ஆம் தேதி, புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து டிசிபி ஜெனிட்டா மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளால் ஃபர்ஹான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடமிருந்து சொகுசு கார், பல போன்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஷா, கர்நாடகா உள்ளிட்ட பாலா மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களை ஃபர்ஹான் இதுபோன்று ஏமாற்றியுள்ளதாகவும் காவத்துறையினர் கூறியுள்ளனர்.
திருமணம் செய்துகொள்வதாக கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் செய்து செய்திருப்பது பலரையும் அதிர வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8