"மேரேஜ் FIX ஆயிடுச்சு.. வந்து கூட்டிட்டு போ" ..ஜேஜே பட ஸ்டைலில், 10 ரூபாய் நோட்டுல காதலனுக்கு இளம்‌ பெண் எழுதிய லெட்டர் .. வைரல் ஃபோட்டோ

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Apr 21, 2022 03:15 PM

வீட்டில் திருமணம் நிச்சயம் செய்துவிட்டதாகவும் அதற்கு முன்பாக தன்னை அழைத்துச் சென்றுவிடும்படியும் இளம்பெண் ஒருவர் 10 ரூபாய் நோட்டில் லெட்டர் எழுதி உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Woman writes message for lover on Rs 10 note

Also Read | “எனக்கு முன்னாடியே பொல்லார்டு ஓய்வு பெறுவார்னு நெனக்கவே இல்ல”.. கிரிக்கெட் ஜாம்பவான் டுவிட்டரில் உருக்கம்..!

லவ் லெட்டர்

பழங்காலத்திலிருந்தே இதனுடைய காதல் துணைக்கு கடிதம் எழுதுவதை மனித குலம் மெனக்கெட்டு செய்து வந்திருக்கிறது. புறாவில் தூது, மேகத்தை தூது விடுதல் என சங்க காலம் முழுவதும் காதலுக்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளில் மனிதர்கள். இணையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மனிதர்கள் தங்களது காதலை பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ரூபாய் நோட்டில் தனது காதலனுக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Woman writes message for lover on Rs 10 note

திருமணம்

தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் "விஷால், எனக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் என்னை வந்து அழைத்து போ. ஐ லவ் யூ.. உன்னுடைய கசம்" என்று எழுதப்பட்டுள்ளது.

மாதவன் நடித்த ஜேஜே படத்தில் இதேபோல, நூறு ரூபாய் நோட்டை நாயகன் மற்றும் நாயகி தேடுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல, இங்கே 10 ரூபாய் நோட்டில் தனது காதலனுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார் கசம் என்ற அந்தப் பெண்மணி.

Woman writes message for lover on Rs 10 note

இதனையடுத்து இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவ "யார் அந்த விஷால்" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் "விஷால் கண்ணில்படும்  வரையில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்யவும்" என்றும் "உங்களுடைய நட்பு வட்டாரத்தில் உள்ள அனைத்து விஷால்களுக்கும் இந்த புகைப்படத்தை அனுப்புங்கள்" எனவும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

இளம்பெண் ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது எனவும் அதனால் தன்னை வந்து அழைத்துச் செல்லும்படியும் காதலனுக்கு 10 ரூபாய் நோட்டில் கடிதம் எழுதிய சம்பவம் இணையதளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/

 

Tags : #WOMAN #MESSAGE #LOVER #ரூபாய் நோட்டு #திருமணம் #இளம்பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman writes message for lover on Rs 10 note | India News.