வைரலாகும் ஆஷிஷ் நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் PAGE… அப்படி அதுல என்ன இருக்கு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கம் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ரா…
இந்திய அணிக்காக 1999 முதல் 2017 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ஆஷிஷ் நெஹ்ரா. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. இந்த போட்டி அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான போட்டியாக அமைந்தது. இதுவரை 120 ஒருநாள் போட்டிகள், 17 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 27 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள நெஹ்ரா 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கூல் பயிற்சியாளர்…
இதையடுத்து ஐபிஎல் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்த சீசனில் மிகவும் கூலாக செயல்பட்டார். பரபரபான போட்டிகளுக்கு இடையே கூட எந்தவித பதற்றமும் இல்லாமல் அணிக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல கூலாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகின.
இன்ஸ்டாகிராம்…
இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பற்றிய சுவார்ஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளது. நெஹ்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 38 ஆயிரம் பேர் வரை பாலோ செய்கின்றனர். ஆனால் நெஹ்ரா ஒருவரை கூட பாலோ செய்யவில்லை. அதுமட்டுமில்லை இதுவரை ஒரே ஒரு போஸ்ட் கூட அவர் போடவில்லை. இது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட்கள் இணயத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்களும் ஜாலியாக இதைப் பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
