உயிரை விட முயன்ற இளைஞர்.. பெண் போலீஸ் செஞ்ச விஷயம்.. உலகளவில் கவனம் ஈர்த்த நெகிழ்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜோர்டான் பகுதியை சேர்ந்த போலீஸ் பெண்மணி செய்த செயல் ஒன்று, தற்போது உலக அளவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
அவ்வப்போது சோஷியல் மீடியாவில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி இந்த உலகில் நடக்கும் பல விஷயங்களை குறித்து தெரிந்து கொள்ள உதவி செய்கிறது.
அதே போல, இதில் பல வகையான வீடியோக்கள் மற்றும் செய்திகள் நாளுக்கு நாள் வைரல் ஆவதையும் நாம் நிறைய பார்த்திருப்போம்.
அப்படி சில வீடியோக்கள் அல்லது செய்திகளை நாம் கேள்விப்படும் போது ஒருவித தாக்கத்தையோ அல்லது ஒருவித புத்துணர்ச்சியை கூட நம்மில் உருவாக்கி செல்லும். இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள பெண் போலீஸ் ஒருவர், இளைஞர் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சமயத்தில் செய்த விஷயம், பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஜோர்டானின் தலைநகரான அம்மான் என்னும் பகுதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறிய இளைஞர் ஒருவர், அங்கிருந்து குதித்து அவரது உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அங்கே வரும் பெண் போலீஸ் ஒருவர், அந்த இளைஞரை எதிர்கொண்டு அவரது முடிவை மாற்ற வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
பாலத்தில் இருந்து குதிக்க முடிவு எடுத்த இளைஞரிடம் தன்னை பார்த்து பேசும் படி கூறி, கீழே இறங்கும் படியும் கூறி கெஞ்சுகிறார் அந்த பெண் போலீஸ். இளைஞரின் முடிவு காரணமாக அங்கே ஏராளமானோர் சூழ்ந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத முடிவை கைவிடும் படியும் அவரை சமாதானப்படுத்த பார்க்கிறார் பெண் போலீஸ்.
மேலும் பெண் போலீஸ் இப்படி கெஞ்சி கூறியதன் மத்தியில், அங்கிருந்த சக போலீசார் உதவியுடன் அந்த இளைஞர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், இளைஞரின் தற்கொலை எண்ணத்தை மாற்ற முற்பட்ட பெண் போலீஸ், கண்ணீர் வடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், இளைஞரின் முடிவை கடைசி தருணத்தில் மாற்ற முயன்ற பெண் போலீசின் செயலுக்கு தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான்".. ஊரே சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு!!.. தமிழ்நாடு முழுக்க வைரல்!!