அண்ணனின் விபரீத முடிவு.. கதறியழுத தம்பிக்கு திடீர்னு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கதறி அழுத தம்பியும் அதிர்ச்சியில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் தினேஷ்குமார். 30 வயதான இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிகிறது. தினேஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தினேஷ் குமாருக்கும் அவர் காதலித்துவந்ததாக சொல்லப்படும் இளம்பெண்ணிற்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தேர்வு சரியாக எழுதாததால் கவலையில் தினேஷ் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதனை அறிந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் காவல்நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தினேஷ் குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்டதை அறிந்து ஓடிவந்த உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அங்கு வந்த தினேஷ் குமாரின் சித்தப்பா மகன் வெங்கடேஷ் கதறி அழுதிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வெங்கடேஷ் மயக்கமடைந்து கீழே விழ, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து வெங்கடேஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், நெஞ்சுவலி காரணமாக வெங்கடேஷ் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அண்ணனின் மறைவு செய்தியை கேட்டு, கதறி அழுத தம்பியும் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
Also Read | “யாரு சாமி இவங்க” .. ஓடும் ரயில்ல ஓட்டைய போட்டு எண்ணெயை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
