“என்ன விடுங்க நான் தனுஷ் SONGS கேக்கணும்” .. மாடு மேய்க்காமல் அடம் பிடிக்கும் சுட்டி நாய்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Nov 03, 2022 08:12 PM

சோஷியல் மீடியாவில் நாம் அதிக நேரத்தை செலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் குறித்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

dog listen to dhanush song refuse to cow grazing sources

Also Read | "அட, இது காணாம போன நம்ம பைக் ஆச்சே".. ஓனரை ஓவர்டேக் பண்ணி பெட்ரோல் போட்ட திருடர்கள்.. சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. 😅

அது மட்டுமில்லாமல், இதுவரை கேள்விப்படாத வகையிலான செய்திகள் அல்லது வித்தியாசமான வீடியோக்கள் கூட இணையத்தில் நாம் ரவுண்டு வரும் போது கண்ணில் படும்.

அந்த வகையிலான ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பலரையும் வெகுவாக கவர்ந்து வரும் வகையிலும் அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்து சக்கரக்குடை என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கே மாடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. வழக்கம் போல மாடு மேய்ச்சலுக்கு செல்லும் ரமேஷ் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அங்குள்ள இடத்தில் மாடுகளை கொண்டு சென்று வருவதை வழக்கமாகவும் கொண்டிருந்துள்ளார்.

dog listen to dhanush song refuse to cow grazing sources

ரமேஷிடம் 'மச்சான்' என்ற செல்ல பெயருடன் கூடிய வளர்ப்பு நாய் ஒன்றும் உள்ளது. மாடு மேய்ச்சலுக்கு ரமேஷ் செல்லும் போது தன்னுடன் தனது வளர்ப்பு நாயான மச்சானையும் கொண்டு சென்று வருவார். அது மட்டுமில்லாமல், மாடுகளை மேய்க்கும் சமயத்தில் ரமேஷுக்கு பக்கபலமாகவும் அந்த நாய் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில் தான், மச்சான் நாயிடம் ஒரு மிகப் பெரிய மாற்றம் உருவாகி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த நாயிடம் தனுஷ் பட பாடல்களை கேட்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தனுஷ் பாடல்களை மச்சான் நாய் கேட்டு வந்ததாகவும் கூறப்படும் நிலையில், எஜமானர் ரமேஷுடன் மாடு மேய்ப்பதில் கவனம் செலுத்தாமல், தனுஷ் பாடல்களை மெய்மறந்து கேட்டுக் கொண்டு சுட்டித்தனம் செய்வதாக அதன் எஜமானர் பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

dog listen to dhanush song refuse to cow grazing sources

இத்தனை நாட்கள் ரமேஷுடன் இணைந்து மாடு மேய்த்து வந்த ‘மச்சான்’ நாய், தற்போது தனுஷ் பட பாடல்கள் பிடித்துப் போனதால் தொடர்ந்து பாடல்களை விரும்பி  கேட்டுவரும் இந்த விஷயம் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | Ind Vs Ban : போட்டிக்கு நடுவே பிரஷ்ஷுடன் வலம் வந்த இந்திய அணி ஊழியர்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!

Tags : #DOG #LISTEN #SONG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dog listen to dhanush song refuse to cow grazing sources | Tamil Nadu News.