"BUS-அ நிறுத்துங்க".. திடீர்னு கத்திய பயணி.. சீட்டுக்கு கீழ இருந்ததை பார்த்துட்டு நடுங்கிப்போன கண்டக்டர்.. பரபரப்பான பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் பேருந்து ஒன்றின் இருக்கைக்கு கீழே பாம்பு இருந்ததால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பாம்பு பிடிக்கும் வீரர் ஒருவர் அந்த பாம்பை பிடித்திருக்கிறார்.
Also Read | பேச மறுத்த பக்கத்து வீட்டுப்பெண்... போன்லையும் பிளாக்.. இளைஞர் செஞ்ச பயங்கரம்... தட்டிதூக்கிய போலீஸ்..!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பழமொழி உண்டு. அந்த வகையில் பாம்பை கண்டு அச்சம் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொதுவாக ஒருவரது வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் ஆட்கள் திரண்டு பெரிய களேபரமே நடந்துவிடும். எதிர்பாராத வேளையில் பாம்பை பார்க்க நேரிட்டால் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி நம்மை விட்டு அகலவே சில மணி நேரங்கள் தேவைப்படும். அதுவே, நாம் பயணிக்கும் பேருந்தில் நமது இருக்கைக்கு கீழே பாம்பு இருப்பது தெரியவந்தால்? அந்த இடமே பரபரப்பாகிவிடும். அப்படித்தான் நடந்திருக்கிறது கர்நாடக மாநிலத்திலும்.
அதிர்ந்துபோன பயணி
சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கர்நாடகாவின் சிக்கபல்லாபுரத்தில் இருந்து அந்த பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது பயணி ஒருவர் ஏதேச்சையாக இருக்கையின் கீழே பார்த்திருக்கிறார். அவர் கண்ட காட்சி அதிர்ச்சியின் உச்சிக்கே அவரை கொண்டுசெல்ல, உடனடியாக பேருந்தில் இருந்த நடத்துனரை அழைத்திருக்கிறார். தனது சீட்டின் கீழே பாம்பு ஒன்று இருப்பதாக படபடப்புடன் கூறியிருக்கிறார்.
பாம்பு இருப்பதை உறுதிசெய்த நடத்துனர் உடனடியாக ஓட்டுனரை பேருந்தை நிறுத்தும்படி கூறியிருக்கிறார். இதனையடுத்து, பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்க செய்திருக்கிறார். டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பாம்பு பிடிக்கும் உள்ளூர் நபரான பிரித்வி ராஜ் என்பவருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாகப்பாம்பு
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பிரித்வி ராஜ் பாம்பை தேடும்போது அதை காணவில்லை. இருப்பினும் அவர் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக பாம்பை தேட இறுதியில் பேருந்தின் ஹெட்லைட்டில் பாம்பு இருப்பதை கண்டறிந்திருக்கிறார். இதனையடுத்து சுமார் ஆறு அடி நீளமிருந்த நாகப் பாம்பை பத்திரமாக பிடித்த அவர் அருகில் உள்ள வனப்பகுதியில் அதை விடுவித்திருக்கிறார். இதனால் அந்த பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.