37,000 அடிக்கு மேல பறந்த 'விமானம்'.. தூங்கிய விமானிகள்.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானம் ஒன்றை இயக்கி வந்த விமானிகள் இரண்டு பேர் திடீரென தூங்கிய நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவுக்கு பிரபல விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் வந்துள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள், திடீரென தூங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தை அந்த விமானம் நெருங்கிய போது, தரையிறங்க தவறிய நிலையில், உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாடு, எச்சரிக்கையை எழுப்பி உள்ளது. ஆனாலும், விமானம் உடனடியாக இறங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, ஆட்டோ பைலட் மோடில் விமானம் இருந்த நிலையில், விமானிகளும் தூங்கிக் கொண்டிருந்ததால், தரையிறக்கவும் தவறி உள்ளனர். விமான போக்குவரத்து அதிகாரிகள், பல முறை அவர்களை தொடர்பு கொண்ட பிறகும், விமானிகள் இருவரும் அழைப்பினை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில், ஓடு பாதையை தாண்டி விமானம் சென்ற நிலையில், ஆட்டோ பைலட் மோடு துண்டிக்கப்பட்டதால், விமானத்திற்குள் அலார ஒலி ஒன்று எழும்பியுள்ளது. இதன் பின்னர் தான், விமானிகள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வேகமாக செயல்பட்டு, ஓடு பாதையில் இறங்கும் நேரமான சுமார் 25 நிமிடம் கழித்து அவர்கள் பாதுகாப்பாக தரை இறக்கினர். இதன் காரணமாக, யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தரை இறங்கிய பின்னர், சுமார் இரண்டரை அணி நேரம் கழித்து, அது தரையிலேயே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 37,000 அடி தூரத்திற்கு மேல் பறந்த விமானத்தின் விமானிகள் உறங்கியது தொடர்பான செய்தி, பலரையும் பதற்றம் அடைய செய்துள்ளது. அதே போல, விமானம் சென்ற பாதையின் படமும் வெளியாகி உள்ளது.
இதில், அடிஸ் அபாபா விமான நிலையத்திற்கு அருகே, விமானம் சுற்றிக் கொண்டிருந்த வழித் தடங்கள் காணப்படுகிறது. இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் விமானியின் சோர்வு தான் இதற்கு காரணம் என்றும் விமான போக்குவரத்து ஆய்வாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மற்ற செய்திகள்
