சென்னை விமான நிலையத்தில்.. பயணிகள் ஓய்வெடுக்க அசத்தல் கேப்சூல் HOTEL.. "என்னென்ன வசதி எல்லாம் இருக்கு??"
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில், பயணிகள் ஓய்வு எடுத்ப்பதற்காக புதிய கேப்சூல் ஹோட்டல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Also Read | ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க கூட மாட்டாங்க..!
சென்னையில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் உள்ள நிலையில், இரண்டாவதாக பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க உள்ளதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக, கேப்சூல் ஹோட்டல் ஒன்றை திறந்து வைத்துள்ளனர்.
பொதுவாக, பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானத்தில் செல்லும் பயணிகள், விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை வரும். அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது, பயணிகள் ஓய்வெடுப்பதற்காக, அதிநவீன படுக்கை வசதி கொண்ட கேப்சூல் ஹோட்டல் ஒன்றை சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்துள்ளார்.
இதன் பின்னர் கேப்சூல் ஹோட்டல் குறித்து பேசிய சரத்குமார், தற்போது சோதனை அடிப்படையில், 4 படுக்கைகள் கொண்ட கேப்சூல் ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வுக்காக படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள், இதனை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே போல, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், ஒரு படுக்கையில் ஒரு பயணியும், அவருடன் 12 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த படுக்கை அறைக்குள், பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடம், செல்போன் சார்ஜ் வசதி, புத்தகம் படிப்பதற்கான விளக்கு வசதி, ஏசியை கூடி குறைப்பதற்கான வசதி உள்ளிட்டவை உள்ளன.
ஒரு விமானத்தில் வந்து மற்ற விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமைகளும் வழங்கப்படும். அந்த பயணிகள் யாரும் கேட்கவில்லை என்றால், மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தங்களின் விமான டிக்கெட், போர்டிங் பாஸ், பிஎன்ஆர் நம்பர் கொண்டு முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு மட்டுமே இங்கு தங்க அனுமதி கிடைக்கும்.
தற்போது நான்கு படுக்கைகள் வந்தாலும், விமான பயணிகள் மத்தியில் இந்த கேப்சூல் ஹோட்டல் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.