ஒரே நேரத்தில் தரை இறங்க பார்த்த 2 விமானங்கள்.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்.. அமெரிக்காவையே அதிர வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நடைபெற்ற விமான விபத்து தொடர்பான செய்தி, உலகளவில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், உள்ளூர் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வைத்து சமீபத்தில், ஒரு திடுக்கிட வைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
நேற்று ஒரே நேரத்தில் இரண்டு சிறிய விமானங்கள் தரை இறங்க முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், எதிர்பாராத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது.
அப்பகுதியில் உள்ள இரண்டு சிறிய விமானங்கள் தரை இறங்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஒரு விமானத்தில் இரண்டு பேரும், மற்றொரு விமானத்தில் ஒருவரும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், தரை இறங்க முயன்ற இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிலையில், அந்த இரண்டு விமானங்களும் சுக்கு நூறாக உடைந்த படி, கீழே விழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கொஞ்சம் கூட எதிர்பாராமல் அரங்கேறிய இந்த நிகழ்வால், விமான நிலைய அதிகாரிகள் பீதியில் உறைந்து போயினர். உடனடியாக, இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இரு விமானங்களிலும் இருந்த மூன்று பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக வெளியான தகவல்களின் படி, இரண்டு விமானங்களில் மொத்தம் 3 பேர் இருந்ததாகவும், அவை சிறிய விமானம் என்ற நிலையில், தரை இறங்க முயன்று சுமார் 200 அடிக்கு மேல் விமானங்கள் இருந்த போது, இந்த விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, தரையில் விழுந்த பிறகு அவர்கள் உடலில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் ஒன்றாக மோதும் போதே காயம் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.
அது மட்டுமில்லாமல், எப்படி இந்த இரண்டு சிறிய விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கலாம் என்பதற்கான தெளிவான காரணங்களும் தெரியவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.
இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, விபத்து ஏற்பட்டு அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

மற்ற செய்திகள்
