Tiruchitrambalam D Logo Top

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி.. "அப்படி என்னங்க பண்ணாங்க??"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 22, 2022 12:16 PM

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

indian woman pilot featured in american museum

Also Read | சிசிடிவி காட்சிகள்.. புதரில் கிடந்த சூட்கேஸ்.. திருமணமான அதே நாள் இரவில் நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானத்தை ஓட்டிய முதல் இளம் பெண் கமாண்டராகவும் ஜோயா அகர்வால் ஆகி இருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது ஜோயா அகர்வாலுக்கு அமெரிக்காவில் உள்ள விமான அருங்காட்சியகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 1980 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது. விமான துறையின் வரலாறு தொடர்பாக, சுமார் ஒன்றரை லட்சம் தொல்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதே வேளையில் இந்த அருங்காட்சியகத்தில் ஒரு மனிதர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அப்படி அமெரிக்க அருங்காட்சியகம் கௌரவிக்கும் வகையில், ஜோயா அகர்வால் என்ன செய்தார் என்பது குறித்து பார்க்கலாம்.

indian woman pilot featured in american museum

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ முதல் இந்தியாவின் பெங்களூர் வரை உள்ள வழித்தடம் உலகின் மிக நீளமான விமான வழித்தடம் ஆகும். அது மட்டுமில்லாமல், பனி படர்ந்த வட துருவத்தையும் உள்ளடக்கிய இந்த வழித்தடத்தில் மொத்தம் பயண தூரம் என்பது சுமார் 16,000 கிலோ மீட்டர் ஆகும். அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் குழு, இந்த 16 ஆயிரம் கிலோமீட்டர் வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்தது.

இப்படி ஒரு சாதனை படைத்ததை கௌரவிக்கும் விதமாக தான், அமெரிக்க விமான நிலையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது ஜோயா அகர்வால் பெயருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பெருமைப்பட வைத்த இந்த சம்பவத்தால், ஜோயா அகர்வாலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

indian woman pilot featured in american museum

மேலும் அருங்காட்சியத்தில் தன்னுடைய பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பேசும் ஜோயா அகர்வால், "அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் முதல் இந்திய பெண் நான் தான் என்று நம்பவே முடியவில்லை. முன்னதாக, நான் எட்டு வயதாக இருந்த சமயத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களை பார்த்து விமானியாக வேண்டும் என கனவு கண்டேன். தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் நான் இடம்பெற்றிருப்பது பெரும் மரியாதை. இது எனக்கும் என்னுடைய நாட்டிற்குமான ஒரு சிறந்த உதாரணம்" என ஜோயா அகர்வால் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

indian woman pilot featured in american museum

அது மட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் தங்கள் கனவுகளை ஒரு போதும் கைவிடாமல் தொடர்ந்து அதனை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் ஜோயா அகர்வால் தெரிவித்துள்ளார்.

Also Read | "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

Tags : #FLIGHT #INDIAN WOMAN #PILOT #AMERICAN MUSEUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian woman pilot featured in american museum | World News.