விமானத்துல ஜாலியா ஜன்னல் சீட்ல உக்காந்த இளைஞர்.. டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல ஜன்னல் கண்ணாடியை பார்த்ததும் தூக்கிவாரி போட்ருச்சு.. !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 26, 2022 04:09 PM

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

window Cracks in middle of flight as passengers scream

Also Read | காதல் திருமணம் செஞ்ச மகள்.. கல்யாணத்துக்கு போகாத அம்மா.. கோவத்துல கணவர் செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!

ஜன்னல்

கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி போலந்து தலைநகர் வார்சா-வில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர விமான நிலையத்திற்கு பறந்துகொண்டிருந்தது போலிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று. அப்போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்தவர் கண்ணாடியில் விரிசல் ஏற்படுவதை பார்த்ததும் பதறிப்போயிருக்கிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த இரண்டுபேர் அவசரமாக அடுத்த இருக்கைக்கு எழ முயற்சிக்க விஷயத்தை அறிந்த சக பயணிகள் அச்சத்தில் கத்தியிருக்கிறார்கள்.

window Cracks in middle of flight as passengers scream

இதனால் விமான பணியாளர்கள் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் சமாதானப்படுத்தி தங்களது இருக்கையில் அமரும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள். இதனிடையே இந்த தகவல் விமானிக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. நியூயார்க்கின் வடகிழக்கில் போலந்து ஏர்லைன்ஸ் போயிங் 787-8 விமானம் பறந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து விமானம் பறந்துகொண்டிருந்த உயரத்தை உடனடியாக விமானிகள் குறைத்திருக்கின்றனர்.

விரிசல்

ஜன்னலின் இறுக்கம் சேதமடையவில்லை என்றும், கண்ணாடியை கருமையாக்கப் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரோஃபோட்டோக்ரோமடிக் லேயர் தான் பாதிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. இது எப்போதாவது மிகவும் அரிதாகவே நடக்கும் எனத் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், இதனால் பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் விமானம் உடனடியாக தரையிறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து விமானம் பறந்து நியூயார்க் நகரத்தில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையதில் பத்திரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் மீண்டும் வார்சாவுக்கு விமானம் திரும்பியிருக்கிறது. அதன்பிறகே அந்த கண்ணாடி மாற்றப்பட்டிருக்கிறது. FAA விதிமுறைகளின்படி, ஒரு ஜன்னல் கண்ணாடி வெளியில் உள்ள அழுத்தத்தை விட குறைந்தபட்சம் 33% அதிக அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது ஜன்னல் கண்ணாடி குறைந்தபட்சம் மற்றொரு 378 பவுண்டுகள் சக்தியைத் தாங்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

window Cracks in middle of flight as passengers scream

அழுத்தம்

விமானத்தின் அழுத்தம் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாக தெரிவித்திருக்கும் அதிகாரிகள், இதனால் விமானத்தின் உயரம் உடனடியாக குறைக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் மட்டுமே விமானம் உடனடியாக தரையிறக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த விமானத்தில் பயணித்த நபர்கள் சிலர் விரிசலடைந்த கண்ணாடியை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட, அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

Also Read | "இனி கடவுள் நினைச்சாதான்".. தகர்க்கப்படும் 100மீ உயர கட்டிடம்.. நிபுணர்கள் சொல்லிய வியக்கவைக்கும் தகவல்கள்..!

Tags : #FLIGHT #WINDOW CRACKS #PASSENGERS #PASSENGERS SCREAM #WINDOW CRACKS IN MIDDLE OF FLIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Window Cracks in middle of flight as passengers scream | World News.