‘இந்தியாவில் இப்டியே போச்சுனா’... ‘ஜூன், ஜூலையில்’... ‘கலக்கத்தை ஏற்படுத்தும்’... ‘எய்ம்ஸ் இயக்குநரின் தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 07, 2020 09:20 PM

இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைய வாய்ப்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covid19 peak in India likely in June-July, AIIMS Director

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இந்தியாவில் தற்போது வரை 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்ர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகள், புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உச்சமடைய வாய்ப்புள்ளது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தில் மாற்றங்கள் உள்ளன. எனினும் அப்போது தான் கோவிட்-19 நோயின் தாக்கமும், ஊரடங்கு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் நமக்கு புரிய வரும்’ என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரிவடைந்து வரும் நிலையில் ரன்தீப் குலேரியா கூறிய தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.