'இப்டியா நடக்கணும்?'.. '269 பேர்'.. 'பதைபதைக்க வைத்த நொடிகள்'.. 'விமான பயணத்தில் நேர்ந்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jul 12, 2019 01:32 PM

நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக தடுமாறியதில் 37 பயணிகள் காயமடைந்தனர்.

Canada flight redirect after turbulence injures 37

கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது.  விமானத்தில் 269 பயணிகளும், 15 விமானப் பணியாளர்களும் இருந்தனர். 2 மணிநேரம் கழித்து, அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் குலுங்கியது. திடீரென்று விமானம் ஆட்டம் கண்டதால், பயணிகள் அலறினர். சிலர் முன் இருக்கைகள் மீதும், மேல் கூரையிலும் மோதியதில், பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து விமானி ஹவாயின், ஹோனாலுலு சர்வதேச விமான நிலையத்தை தொடர்புக் கொண்டு, அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். பின்னர் அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. இதில் 37 பயணிகள் காயமடைந்தனர். 9 பேருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டல், உணவுச் சேவைகள் வழங்கப்படுவதாகவும், தற்போது மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : #AIRCANADA #FLIGHT #TUBULANCE