'செருப்பை கழற்றி தன்னையே அடித்துக்கொண்டு...' நிர்பயா வழக்கு தூக்கு தண்டனை கைதியின் மனைவி கோர்ட் வாசலில் செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 19, 2020 07:21 PM

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் நிர்பயா வழக்கு குற்றவாளியும், தூக்குத்தண்டனை கைதியான அக்‌ஷய் சிங்கின் மனைவி புனிதா தேவி மயங்கி விழுந்தார்.

The Nirbhaya case accused\'s wife was lying on the court premises

தன்னைத்தானே காலணியைக் கழற்றி அடித்துக் கொண்டு கோர்ட் வளாகத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

நிர்பயா தூக்குத் தண்டனை கைதிகளுக்கு நாளை காலை 5.30 மணிக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிர்பயாவை கொடூரமாக சிதைத்த நால்வரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களிடம் திரும்ப திரும்ப தூக்குத் தண்டனையை நிறுத்த தொடர்ந்து மனுக்களை வழங்கினர், இதில் கடைசி மனு மீதான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்ததையடுத்து குற்றவாளி அக்‌ஷய் சிங்கின் மனைவி கோர்ட் வாசலில் செருப்பை கழற்றி அவரையே அடித்து கதறி அழுதார். பின் அங்கயே மயக்கம் போட்டு விழுந்தார்.

இந்த நிலையில் நாளை நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனிதா தேவியும் தன் கணவன் போன பிறகு விதவையாக வாழ விரும்பவில்லை எனவே தனக்கு விவாகரத்து கோரி அவுரங்காபாத் குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்தார், இதுவும் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தும் முயற்சியே என்று பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

நிர்பயா பலாத்கார கொலைக் குற்றவாளியும் தூக்குத் தண்டனை கைதியுமான அக்‌ஷய் சிங்கிற்கும் புனிதா தேவிக்கும் மே 29, 2010-ல் ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒன்பது வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.

Tags : #NIRBHAYA