'இந்த 3 நாடுகளுக்கு'... 'அநாவசியமாக செல்ல வேண்டாம்'... 'மத்திய அரசு வலியுறுத்தல்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரானா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் சில நாடுகளுக்கு அநாவசியமாக செல்ல வேண்டாம் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் 14 நாட்கள் நோய்த்தடுப்பு தனிமைக் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர், சுகாதார அமைச்சக கொரானா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் +91-11-23978046 அல்லது ncov2019@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
