‘எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை’.. நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து ‘மாயமான’ நபர்.. தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 09, 2020 03:45 PM

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man under observation for coronavirus goes missing from hospital

நேற்று மாலை துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த நபருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவரை மங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு மேற்கொண்ட சிகிச்சையில் கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையின் தனிவார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென மருத்துவமனை ஊழியர்களிடம், தனக்கு கொரோனா பாதுப்பு இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு தெரிந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொள்வதாக கூறி அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அதிகாரிகள், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சைக்கு வரவில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அந்த நபரின் வீட்டை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MANGALORE #CORONAVIRUS #MISSING