'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 09, 2020 01:25 PM

கொரானோ அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tirumala Tirupati Devasthanam Board advises in Coronavirus

இந்தியாவில் இதுவரை 41 பேர் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் திருப்பதி  தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி, சுவாமி தரிசனம் செய்வதற்கான வைகுண்டம் காத்திருப்பு அறை, மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா, அன்னதான கூடம் ஆகிய  பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், தும்மல், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் திருமலை வந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.  அதேபோன்று பக்தர்கள் கூடும் இடங்களில் 2  மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : #TTD #TIRUPATI #TIRUMALA #CORONAVIRUS