கேஸ் சிலிண்டர் இனி 'வாட்ஸப்'பில் புக் பண்ணலாம்...! 'ரொம்ப சிம்பிள் தான்...' அதுக்கு ஒரு 'நம்பர்' இருக்கு...! எல்பிஜி நிறுவனம் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமையல் எரிவாயு இனி மெசேஜ் மூலம் மட்டுமல்லாமல் வாட்ஸப் மூலமும் புக் செய்யும் புதிய அணுகுமுறையை வெளியிட்டுள்ளது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்) நாடு முழுவதும் வாட்ஸப் மூலம் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
எல்பிஜி வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் நம்பரில் இருந்து வாட்ஸப்பில் 1800224344 என்ற எண் வாயிலாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளருக்கு புக்கிங்கை உறுதிப்படுத்த ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். அத்துடன், கட்டணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ அல்லது இதர டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்தலாம்.
மேலும் சிலிண்டர் எப்போது கிடைக்கும் என்ற ட்ராக்கிங் வசதியும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது வாடிக்கையாளர்களுக்கும் பாரத் எல்.பி.ஜி நிறுவனத்திற்கும் இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாரத் கேஸ் எல்பிஜி சந்தைப்படுத்தல் இயக்குனர் அருண் சிங் கூறியபோது, வாட்ஸப்பில் இருந்து எல்பிஜி முன்பதிவு செய்வது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எளிமையாக அமையும். இப்போது அனைவரும் வாட்ஸப் பயன்படுத்துகிறோம் எனவே பழைய தலைமுறை முதல் இளைய தலைமுறை வரை உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் இந்த வசதி நெருங்கச் செய்யும் என தெரிவித்தார்.