'கொரோனா வைரஸ் ஒரு பக்கம்னா...' கடலுக்கு அடியில குவியுற 'மாஸ்க்'னால வரப்போகும் ஆபத்து...! எச்சரிக்கை தகவல்... !
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அடங்காத சூழலில் அதற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கடல்களில் மிதக்க ஆரம்பித்து கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவித்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகெங்கும் பரவும் வரும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தான் தீங்கு விளைவிக்கிறது என்று பார்த்தால் அதற்கு எதிர்வினை போல இயற்கைக்கும் தீங்கை விளைவிக்க ஆரம்பித்து விட்டது. சமீபகாலமாக கொரோனா பரவியதால் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இயற்கை அதனை மறுசுழற்சி செய்து வருகின்றது என்ற வீடியோக்கள் வலம் வந்தன. அதேசமயம் சத்தமின்றி இயற்கைக்கு தீங்கும் நடந்து கொண்டு இருக்கிறது.
பிரான்சின் ஆபரேசன் கிளீன் சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கொரோனா வைரசிற்கு பயன்படுத்தப்பட்ட மாஸ்க் கையுறை போன்றவை கடல்களில் குப்பைகளாக இருப்பதை காட்டியுள்ளார்.
அந்த அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான லாரன்ட் லோம்பார்ட் அந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, இந்த ஆண்டு கொரோனாவுடன் நீங்கள் கடலில் குளிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த புதுவகை மாசுவை தவிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறிய அவர் இது சிறிதளவே இதேபோல் இன்னும் பில்லியன் எண்ணிக்கையில் பெறப்போகிறோம், இது ஆரம்பம் தான் எனவும் எச்சரித்துள்ளார்.
மனிதர்களுக்கு கொரோனா தாக்காமல் இருக்க பில்லியன் கணக்கில் மாஸ்குகளை தயாரிக்கிறோம். அவை எல்லாம் விரைவில் மத்தியதரைக்கடலில் ஜெல்லி மீன்களை விட அதிகம் மாஸ்குகள் குவிந்திருக்கும் ஒரு பெரிய அபாயம் நேரிடப்போகிறது என்கிறார்.
இவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் மாஸ்குகள் மண்ணோடு மண்ணாக மட்கிப்போக 400 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.