'மத்திய உள்துறை' அமைச்சருக்கு கொரோனா 'தொற்று' உறுதி.,,, மருத்துவமனையில் அனுமதி... அவரே பதிவிட்ட 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதியுமான அமித் ஷா அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்வீட் ஒன்றை அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'கொரோனாவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் எனக்கு இருந்த நிலையில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்கள் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் கொரோனா தொற்று மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் சென்னையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020