'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர் கிண்டியில் அமைந்துள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூலை மாதம் வாரம் சென்னை கலெக்டராக அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொரோனா தொற்று மூலம் சில தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட பலர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும், தமிழகத்தில் சுமார் 6000 பேர் வரை கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அடுத்த கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து வரும் 30 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மற்ற செய்திகள்
