'கொரோனா'விலிருந்து பூரணமாக குணமடைந்துவிட்டார்... ஆனால்... - தமிழக அமைச்சரின் உடல்நிலை குறித்து 'மருத்துவமனை' வெளியிட்ட 'அறிக்கை'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் சிலர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை காரணமாக, அவர் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டார். இருப்பினும், அவர் முன்பை போல சகஜ நிலைக்கு திரும்பும் வரை மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார்.
தற்போது அமைச்சர் கே.பி அன்பழகன் முழுவதுமாக குணமடைந்து விட்ட நிலையில், இன்று வீடு திரும்புகிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
